1.திருக்குர்ஆனின் பக்கம் திரும்புதல்
உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகளில் முதலாவது திருக்குர்ஆன்தான். திருக்குர்ஆனைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டவர்களை அல்லாஹ் (குழப்பங்களிலிருந்து) பாதுகாப்பான். அதனைப் பின்பற்று வோரை (தீமைகளிலிருந்து) காப்பாற்றுவான். அதன் பக்கம் மக்களை அழைப்போர் நேர்வழியின் பால் வழிகாட்டப்படுவர்.
இந்தத் திருக்குர்ஆன் படிப்படியாக சிறுகச் சிறுக இறக்கியருளப்பட்டதன் நோக்கமே மனதைச் சத்தியத்தில் நிலைத்திருக்கச் செய்வது தான் என்று அல்லாஹ் கூறி யிருக்கின்றான். நிராகரிப்பாளர்களின் ஆட்சேபணைக்குப் பதிலளிக்கும் விதத்தில் பின்வருமாறு கூறுகின்றான்:
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ القُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ
فُؤَادَكَ وَرَتَّلۡنَاهُ تَرْتِيلًا ، وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ حَنَّا جِئْنَاكَ بِالْكَ تَفْسِيرًا )
[அலஃபர்கான் : ۳۳،۲۲]
"இவர் மீது இந்தக் குர்ஆன் மொத்தமாக அருளப்படக் கூடாதா? என்று நிராகரிப்போர் கேட்கின்றனர். (நபியே!) இப்படித் தான் இதன் மூலம் உம் உள்ளத்தைப் பலப் படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். அவர்கள் உம்மிடம் எந்த உதாரணத்தைக் கூறினாலும் (அதை விட) உண்மையானதையும் அழகிய விளக்கத்தையும் நாம் உமக்குக் கொடுக்காமலில்லை." (25:32,33)
இதயத்தை உறுதிப்படுத்துவதற்கு அடிப்படையாக திருக்குர்ஆன் அமைந்திருப்பதற்குக் காரணம் என்ன?
திருக்குர்ஆன் மனித உள்ளங்களில் ஈமானை விதைக்கிறது.
அல்லாஹ்வுடனான மனிதனின் தொடர்பைப் பலப் படுத்துகிறது.
இஸ்லாத்தின் விரோதிகளான நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் எழுப்புகின்ற சந்தேகங்களுக்கு மறுப்புத் தருகின்றது.
ஒழுக்க விழுமங்களையும் சீரிய போதனைகளை யும் முஸ்லிம்களுக்கு அளிக்கிறது. அந்த போதனைகள் அவர்களை சத்தியத்தை அறிந்தவர்களாக ஆக்குவ தோடு செல்லும் பாதை பாதுகாப்பானது என்ற உறுதி யையும் அவர்களுக்குத் தருகின்றது.
2. கல்வி
கல்வியறிவு இல்லாமல் நடப்பவர்கள் இருட்டில் நடப்பவர்களைப் போலாவர். இருட்டில் நடப்பவர்கள் ஆபத்துகளுக்கு ஆளாவர். சிலபோது அவர்களுக்கே தெரியாமல் வழியில் அவர்களுக்கு துன்பம் நேரலாம். இவ்வாறே கல்வியறிவு இல்லாதவர்கள் சந்தேகங்களிலும் மோகங்களிலும் பாலுணர்வுகளைத் தூண்டக்கூடிய விஷயங்களிலும் எளிதாக வீழ்ந்துவிடுவார்கள்.
கல்வியைத் தேடும் மாணவர்கள் பின்வரும் விஷயங் களைப் பேணி நடப்பது அவசியமாகும்.
அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்தை மேற் கொள்ள வேண்டும்.
கல்வி தேடலின் மூலம் தனது அறியாமையை அகற்றும் எண்ணம் கொள்ள வேண்டும்.
கல்வி தேடலின் மூலம் சமூகத்தின் அறியாமையை அகற்றிட நாட்டம் கொள்ள வேண்டும்.
கல்வி தேடலின் மூலம் இஸ்லாமிய ஷரீஅத்தைப் பாதுகாக்கவும் அதற்கு வரும் ஆபத்தை தடுக்கவும் நாட்டம் கொள்ள வேண்டும்.
கல்வி தேடலின் மூலம் சரியான இஸ்லாமியக் கொள்கை கோட்பாடுகளைப் பரவலாக்கிட நாடவேண்டும்
3. ஷரீஅத்தைப் பற்றிப் பிடித்து வாழுதல், நல்ல அமல்களைச் செய்தல்
يُثَبِّتُ اللهُ الَّذِينَ آمَنُوا بِالقَوْلِ الثَّابِتِ فِي الحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَيُةِ وَفِي الآخِرَيُةِ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللهُ مَا يَشَاءُ ﴾ [إبراهيم : ٢٧]
நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான். (அல்குர்ஆன் 14:27)
இவ்வுலக வாழ்க்கையைப் பொறுத்து முஃமின்களை நன்மையைக் கொண்டும் நற்செயல்களைக் கொண்டும் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். மறுமையிலோ அதாவது கப்ரிலோ இரண்டு வானவர்கள் அவர்களிடம் வந்து அவர்களின் இறைவனைப் பற்றியும் அவர்களின் மார்க்கத்தைப் பற்றியும் நபியைப் பற்றியும் கேட்கும் போது அதற்கு சரியான முறையில் பதிலளிப்பார்கள்.
மற்றும்
"அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி அவர்கள் செயல் பட்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும் (சத்தியத்தில் அவர்களை) நன்கு உறுதிப்படுத்தக்கூடிய தாகவும் இருந்திருக்கும்." (அல்குர்ஆன் 4:66)
ஆம்! உண்மைதான்! இல்லையெனில் குழப்பங்கள் தலைதூக்கும்போது நற்செயல்கள் புரியாமல் சோம் பேறியாக இருப்பவர்களிடமிருந்து உறுதியை எதிர்பார்க்க முடியுமா என்ன?!
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை அவர்களின் இரட்சகன் உறுதிப்படுத்துகிறான். இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செயல்களைத் தொடர்ந்து செய்ப வர்களாக இருந்தார்கள். நற்செயல்கள் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வது தான் அவர்களுக்கு மிகப் பிரியமாக இருந்தது.
Comments
Post a Comment
welcome to your comment!