Monday 23 May 2016

ஒரு சிறந்த துஆ இதை காலையிலும்,மாலையிலும் ஒதிவாருங்கள் !

அது இந்த துஆதான் !
மனனம் செய்து ஒதிவாருங்கள்!
நமது கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் அன்னை ''உம்மு ஸல்மா ''ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களுக்கு வழங்கிய ''மூவாயிரம் ஆண்டுகள் ''தஸ்பீக்'' செய்த நன்மைக்குரிய ஒரே ''தஸ்பீக் '' *அதன் விபரம் அறிவோம் அதன்பபடி அமல் செய்து நன்மைகள் அடைவோம் ..!*
*ஒரு சமயம்... அன்னை ''உம்மு ஸல்மா'' ரலி அல்லாஹு அன்ஹா,அன்னவர்கள் 'லுஹர்' தொழுகையை முடித்து இருப்பில் அமர்ந்து ''தஸ்பீக்'' செய்து கொண்டிருந்தார்கள் அண்ணல் பெருமானார் அன்னவர்கள் ''அஸர்'' தொழுதுவிட்டு
வந்துபார்க்கும் பொழுதும் அதன்படியே அன்னை அன்னவர்கள் ''தஸ்பீக்'' செய்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள் .பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் அதைக்கண்டு புன்முறுவலுடன் சென்றுவிட்டார்கள் .

அண்ணல் எம்பெருமானார் அன்னவர்கள் ''இஷா ''தொழுகை முடித்து இல்லம் வந்து பார்க்கும் போதும் அன்னை ''உம்மு ஸல்மா ''அன்னவர்கள் ''தஸ்பீக்'' செய்த வண்ணம் அமர்ந் திருந்தார்கள்.
தஸ்பீக் ''முடித்து அண்ணலரிடம் ஸலாம் கூறியபின் .பெருமானார் ஸல்லல்லாஹு வ அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் .யா ...உம்மு ஸல்மா...! '' உங்களுக்கு ஒரு' தஸ்பீக்''
சொல்லித்தரட்டுமா ..? ஒருதடவை அந்த ''தஸ்பீக்'' சொன்னால் மூவாயிரம் ஆண்டுகள் ''தஸ்பீக்'' செய்த நன்மைகள் கிடைக்கும் என அண்ணல்அன்னவர்கள் நயம்பட நவின்றார்கள் .
அதைக்கேட்ட அன்னை ''உம்மு ஸல்மா''ரலி அல்லாஹு அன்ஹா ''அன்னவர்கள் யா ....ரசூலுல்லாஹ்...! ,அதை உடனே சொல்லித்தாருங்கள் என பரிவுடன் வேண்டினார்கள் .
*அண்ணல் பெருமானார் அன்னவர்கள் அருளிய ''தஸ்பீக் ''
{*''சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி- அதத ஹல்கிஹி-வ ரிழா
நப்(ஸ்)சிஹி-வஜீனத்து அர்(ஸ்)சிஹி- வ மிதாத்த கலிமாத்திஹி*}
இந்த தஸ்பீக்''ஓதி நம் தேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கேட்டால் தங்கு தடையின்றி அருள்வான் என
பெருமக்கள் கூறுகின்றனர் .
*இன்ஷா அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் இந்த தஸ்பீக்''பொருட்டால் முழு நன்மைகளும் கிடைக்கச்செய்து ,அல்லாவின் திரு பொருத்தத்தை அடைந்த பெருமக்களாய் வாழ
வல்ல ரஹ்மான் நற்கிருபையும் ,ரஹ்மத்தும் செய்தருள் வானாகவும்...ஆமீன் ..! ஆமீன் ..!!!
{ரபீக் அஹமது ஃபைஜி}*
ஒரு சிறந்த துஆ இதை காலையிலும்,மாலையிலும் ஒதிவாருங்கள் !

1 comment:

  1. Ummu salama(raziyallahu anhu) avargal illai.. Zuvairiya (raziyallahu anhu) Book : Sahih muslim:2726

    ReplyDelete

welcome to your comment!