இஸ்லாத்தில் பெண்கள் நிலை

 


இஸ்லாத்தில் பெண்கள் நிலை


இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்கள் குறித்து மற்ற சமூகத்தினரின் நிலைபாடு என்ன? அவர்களை எப்படி நடத்திக் கொண்டிருந் தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.


கிரேக்கர்களிடத்தில் பெண்கள் வியாபாரப் பொருட் களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்கவில்லை. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே இந்தன. பெண்களுக்கு சொத்துரிமை, செல்வத்தை நிர்வகித்தல் போன்ற உரிமைகளும் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல தத்துவஞானி சாக்ரடீஸ் என்பவர், "பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப் பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷமரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக




இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்து விடும்" என்று கூறியுள்ளார்.


ரோமானியர்கள் பெண்களுக்கு 'ஆன்மா" கிடையாது என்று கருதிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பெண் களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. "பெண்ணுக்கு ஆன்மா இல்லை" என்பது அவர்களின் கோசமாகிவிட்டிருந்தது. அதனால் தான் பெண்களை அவர்கள் மீது கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், அவர்களைத் தூண்களில் கட்டியும் துன்புறுத்தி வந்தார்கள். அதுமட்டுமின்றி ஒரு குற்றமும் செய்யாத பெண்களை குதிரை களின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு குதிரைகளை மிக வேகமாக ஓட்டிவிடுவார்கள்.


பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இன்னும் ஒருபடி மேல் சென்று கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறுதல் எனும் அடிப்படையில் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்துவிடுபவர் களாகவும் இருந்திருக்கின்றனர்.


சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தை அழித்து விடக் கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனை வியரை உயிரோடு புதைத்துவிடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.


பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருது கிறார்கள். ஏனெனில் அவள்தான் ஆதமை வழிகெடுத்து மரத்தைச் சாப்பிடச் செய்தாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், அப்பெண் ணினால் வீடு, அவள் தொடும் பொருட்கள் எல்லாம் அசுத்த மாகிவிடும் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்கு சகோதரர் களிருந்தால் அவள் தந்தையின் சொத்தில் அவளுக்கு சிறிதளவும் பங்கு கிடையாது எனவும் கருதுகிறார்கள்.


கிறிஸ்தவர்கள், பெண்களை ஷைத்தான் எனக் கருது கிறார்கள். கிருஸ்தவ மத அறிஞர்களில் ஒருவர், "பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல" எனக் கூறினார். புனித பூனபெஃன்தூரா என்பவர், "நீங்கள் பெண்ணைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அதுமட்டுமல்ல அவளை வனாந்தர ஜீவனாகக் கூட கருதாதீர்கள். உண்மையில் நீங்கள் காண்பது சாத்தானின் உருவத்தைத் தான். நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றமாகும்"


மேலும் கடந்த (19 ஆம்) நூற்றாண்டின் மத்திய காலம் வரை ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் குடி உரிமை வழங்கப்படாதவர்களாக இருந்தனர். இது போன்றே பெண் களுக்கென தனிப்பட்ட உரிமைகள் எதுவும் கிடையாது. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள அவளுக்கு உரிமை கிடையாது. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் நாடாளுமன்றம் பெண் களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடாதென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.


பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு மாநாட்டைக் கூட்டினர். அதில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்ட வர்கள் என்று முடிவு செய்தனர். 1805-ம் ஆண்டு வரை ஆங்கி லேயர்களின் சட்டம், ஒரு கணவன் தனது மனைவியை விற்பதற்கு அனுமதித்திருந்தது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது.


(பெனி, ஷிலிங் Penny, Schilling என்பது ஆங்கிலேய நாணயத்தின் பெயர்கள்)


இஸ்லாம் வருவதற்கு முன்பு வரை அரேபியர்கள் பெண் களை இழிந்த பிறவிகளாகக் கருதி வந்தனர். அவளுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. சொல்லப்போனால் அவர்களில் பெரும்பாலோர் தமது பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தனர்.


பிறகு பெண்களை விட்டும் இக்கொடுமைகளைத் துடைத் தெறிவதற்காகவும் ஆண்களும் பெண்களும் சமமானவர்களே. ஆண்களுக்கு உரிமைகள் இருப்பதுபோலவே பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன என்பதை விளக்குவதற்காகவும் இஸ்லாம் வந்தது. அல்லாஹ் கூறுகிறான்:


மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள் வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் மிகச் சிறந்தவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், சூழ்ந்தறிபவன். (49:13)


"ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறி தளவும் அவர்கள் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்." (4:124)


"தனது பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டுமென மனிதனுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். " (46:15)


"நம்பிக்கை கொண்டோரில் பரிபூரண நம்பிக்கை உடைய வர்கள் அழகிய குணம் உடையவர்களே. தனது மனைவி யிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்" என நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதி-1162)


"மனிதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள் வதற்கு அதிக உரிமை படைத்தவர் யார்?' என ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்" எனக் கூறினார்கள். "பின்பு யார்?" எனக் கேட்டார். நபியவர்கள், "உன் தாய்" எனக் கூறினார்கள். அதன் பிறகு யார்?" எனக் கேட்டார். "உன் தாய்" என்றே கூறினார்கள்.'அதன் பிறகு யார்?” எனக் கேட்கவும் நபி (ஸல்) அவர்கள், "உன் தந்தை" எனக் கூறினார்கள்.


(புகாரி-5971, முஸ்லிம்-2548)


இது பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும்.


பெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்

இஸ்லாத்தில் பெண்களுக்கு பொதுவான சில உரிமைகள் உள்ளன. அவை வருமாறு:


1.தனக்குச் சொந்தமாக்கும் உரிமை: வீடுகள், விளை


நிலங்கள், தொழிலகங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவள் தாயாக, மகளாக, சகோதரியாக எப்படி இருந்தாலும் சரியே.


2. திருமணம் செய்யும் உரிமை: கணவனைத் தேர்வு


செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்க மறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் விவாகரத்து செய்வது ஆகிய உரிமைகள் அவளுக்கு உள்ளன. இவை பெண்களுக்கு (நபிவழி மூலம்) நிரூபணமான உரிமைகளாகும்.


3. கல்வி கற்கும் உரிமை: அனைத்து வகையான


கல்வியையும் கற்க அவளுக்கு உரிமையுண்டு. குறிப்பாக கடமையான கல்வியை கற்க அவளுக்கு உரிமை உள்ளது. உதாரணமாக அல்லாஹ்வை அறிவது, அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களையும் அதை நிறைவேற்றும் முறை யையும் அறிவது. இன்னும் அவள் நிறைவேற்றக் கடமைப் பட்ட உரிமைகளையும் அவளுக்குத் தேவையான ஒழுக்கங் களையும் அவள் கடைபிடிக்க வேண்டிய சிறந்த பண்பாடு களையும் அறிவது. ஏனெனில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கல்வியைத் தேடுங்கள் என்று பொதுப்படையாகவே கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்:


"வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந்துகொள்." (47:19 )


"கல்வியைத் தேடுவது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு வரின் மீதும் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (இப்னுமாஜா)


4.செலவு செய்யும் உரிமை: அவளுடைய பொருளில்


இருந்து அவள் விரும்பிய அளவு தர்மம் செய்வதற்கும் அதிலிருந்து அவளுக்கும் அவள் விரும்பினால் அவளுடைய கணவன், பிள்ளைகள், அல்லது தாய்மார்கள் தந்தைமார் களுக்கும் வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்வ தற்கும் அவளுக்கு உரிமை உண்டு. இவ்விஷயத்தில் பெண்களும் ஆண்களைப் போன்று உரிமை பெறுகிறார்கள்.


5. மரணசாசனம் செய்யும் உரிமை: அவள் உயிருடன்


இருக்கும்போது அவளுடைய சொத்தில் மூன்றில் ஒரு பாகம் மரணசாசனம் செய்வதற்கு அவளுக்கு உரிமை உண்டு. அவளது மரணத்திற்குப் பின்பு அவளுக்காக அந்த மரணசாசனம் எந்த ஆட்சேபணை இல்லாமல் செயல்படுத் தப்பட வேண்டும். ஏனெனில் மரணசாசனம் செய்வது மனிதனின் தனிப்பட்ட உரிமையாகும். இந்த உரிமை ஆண் களுக்கு இருப்பதுபோல் பெண்களுக்கும் உண்டு. ஆயினும் இவ்வாறு செய்யும் மரணசாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. இதில் ஆண்களும் பெண்களும் சமமே.


6. ஆடை அணியும் உரிமை: பட்டு, தங்கம் ஆகிய


இரண்டில் அவள் விரும்புவதை அணிந்து கொள்ள அவளுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இவ்விரண்டும் ஆண்களுக்கு விலக்கப்பட்டதாகும். ஆயினும் அந்நிய ஆடவருக்கு முன் அரை குறை ஆடையுடன் காட்சி தரக்கூடாது.



7. அலங்காரம் செய்யும் உரிமை: தன் கணவனுக்காக


தன்னை அலங்கரித்துக் கொள்ள அவளுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் அவள் சுர்மா போட்டுக் கொள்ளலாம்.அவள் விரும்பினால் இரு கன்னங்களிலும் உதடுகளிலும் சிகப்புச் சாயம் இட்டுக் கொள்ளலாம். அழகான ஆபரணங்களையும் அணிந்து கொள்ளலாம்.


8. உண்ணப் பருகும் உரிமை: நல்ல, சுவையான உணவு


களை உண்ணவும் அது போன்ற பானங்களை அருந்தவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடு மில்லை. உணவிலும் பானத்திலும் எது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதோ அது ஆண்களுக்கும் அனுமதிக்கப் பட்டது தான், பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டது தான். ஒன்று விலக்கப்பட்டது என்றால் அது ஆண்களுக்கும் விலக்கப்பட்டதே, பெண்களுக்கும் விலக்கப்பட்டதே.


அல்லாஹ் கூறுகிறான்: ''உண்ணுங்கள் பருகுங்கள்


ஆனால் வீண் விரையம் செய்யாதீர்கள். வீண் விரையம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை." (7:31) இங்கு இரு பாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


9. வாரிசு உரிமை: அவள் ஒருவருக்கு வாரிசாகவோ


அவளுக்கு ஒருவர் வாரிசாகவோ ஆவதற்கும் உரிமையுண்டு.


கணவன் மீது மனைவிக்குரிய உரிமைகள்


பெண்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் கடமைகள் இருக்கின்றன. அவை அவளுடைய கணவன் அவளுக்கு செய்யய வேண்டிய உரிமைகள், கடமைகள் ஆகும்.

இவ்வுரிமைகள், கடமைகள் தன் கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய குறிப்பிட்ட சில உரிமைகள் கடமைகளுக்குப் பகரமாகும். இதோ மனைவிக்கு கணவன் அவசியம் நிறை வேற்ற வேண்டிய சில உரிமைகள்:


அல்லாஹ் கூறுகிறான்: "பெண்கள் மீது (ஆண்களுக்கு உள்ள) உரிமைகள் போல ஆண்கள் மீதும் (பெண்களுக்கு ) உரிமைகள் சிறந்த முறையில் உள்ளன." (2:228)


இவற்றில் சிலவற்றை அவள் மன்னித்து விட்டாலான்றி கணவன் இவற்றை முழுமையாக மனைவிக்கு வழங்குவது கடமையாகும்.


1. அவன் தனது வசதி, வருவாயைப் பொருத்து அவளுக்குச் செலவு செய்ய வேண்டும். இச்செலவில் உணவு, பானம், உடை, உறைவிடம், மருத்துவம் ஆகியவை அடங்கும்.


2. அவளுடைய மானம், மரியாதை, உடல், பொருள், மார்க்கம் இவை அனைத்திலும் அவளை அவன் பாதுகாக்க வேண்டும்.


3. அவளுடைய மார்க்க விஷயங்களில் அவசியமான வற்றை அவளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அவனால் இயலாவிட்டால் பள்ளிவாசல்கள், கல்விக் கூடங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற மார்க்க விளக்கக் கூட்டங்களில் அவள் கலந்து கொண்டு மார்க்கத்தைக் கற்பதற்கு அவன் அனுமதிக்க வேண்டும். ஆனால் அவ்விடங்கள் குழப்பத்தைவிட்டும் பாதுகாப்பாக இருப்பதோடு அதனால் அவனுக்கோ அவளுக்கோ இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.


4. அவளிடம் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான்: 'அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்." (4:119)


நல்ல முறையில் வாழ்க்கை நடத்துதல் என்பதில் தாம்பத் தியத்தில் அவளுக்குரிய உரிமையைக் குறைக்காதிருப்பது, திட்டுதல், இழிவாகக் கருதுதல் அல்லது இழிவுபடுத்துதல் மூலம் அவளுக்கு துன்பம் தராமல் இருப்பதும் அடங்கும். இன்னும் அவள் தனது உறவினர்களை சந்தித்து வருவதால் குழப்பம் ஏற்படுமென அவன் பயப்படாதபோது அவளைத் தடுக்காமல் இருப்பதும், அவளால் இயலாத வேலையைச் செய்யும்படி சொல்லாதிருப்பதும், சொல்லாலும், செயலாலும் அவளிடம் நல்ல முறையில் 56நடந்து கொள்வதும் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவது என்பதில் அடங்கும். ஏனெனில் "தன் மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நான் உங்களில் என் மனைவியிடம் சிறந்தவனாக இருக்கிறேன் " என நபி (ஸல் ) கூறினார்கள். (திர்மிதி - 3895)


பர்தா அணிதல்


குடும்பம் சிதைந்து, சின்னா பின்னமாகிவிடாமல் பாது காப்பதற்கு இஸ்லாம் அக்கறை கொண்டுள்ளது. இதனால் அதைச் சுற்றி ஒழுக்கங்கள், பண்பாடுகள் எனும் உறுதி வாய்ந்த வேலியை எழுப்பியுள்ளது. காரணம் மனிதர்கள் நிம்மதியாகவும் சமுதாயம் தூய்மையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக! அச்சமுதாயத்தில் இச்சைகள் தூண்டப்பட முடியாது. காம உணவுர்கள் கிளறப்பட முடியாது. இஸ்லாம் குழப்பத்தின் பால் இட்டுச் செல்லக் கூடியவற்றைத் தடுப்பதற்கான தடைகளையும் ஏற்படுத்தி யுள்ளது. எனவே இஸ்லாம் ஆண், பெண் இருபாலாரும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளை யிட்டுள்ளது.


இவ்வாறே ஹிஜாப்- பர்தா அணிவதையும் அல்லாஹ் பெண்களுக்கு கடமையாக்கியுள்ளான். இது அவர்களுக்குக் கண்ணியம் அளிப்பதற்காகவும், இழிவிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவும், தீயவர்கள் மற்றும் கெட்ட எண்ணம் கொண்டவர்களின் சில்மிஷங்களை விட்டும் அவர்களைத் தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியத்தின் மதிப்பை அறியாதவர்களிடமிருந்து அவர்களைக் காப்பதற்காகவும், அழகையும் அலங்காரங்களையும் வெளிக்காட்டிக் கொண்டு திரிவதனால் ஏற்படக்கூடிய குழப்பத்தின் வாசலை அடைப் பதற்காகவும், பெண்ணுக்கு கண்ணியம், பெருமை எனும் வேலியை எழுப்புவதற்காகமே இவ்வாறு கடமையாக்கி யுள்ளான்.


இஸ்லாம் ஹிஜாபைக் கடமையாக்கியதன் மூலம் பெண்களின் கண்ணியமான வாழ்க்கைக்குப் பொறுப் பேற்க விரும்புகின்றது. எவ்வாறெனில் ஒரு பெண் வயது ஏற ஏற அவளது அழகை சிறிது இழக்கிறாள். அதே நேரம் அவளின் கணவன் வீதிக்குச் செல்லும்போது வாலிபப் பருவத்திலுள்ள இளம் பெண்களை நல்ல அழகும் இளமையும் கொண்டவர் களாகக் காண்கிறான். பிறகு அவன் தன் மனைவிடம் வரும்போது ஒப்பு நோக்க ஆரம்பித்துவிடுகிறான். இதனால் குடும்பத்தில் குழப்பம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.


பலதாரமணம்


மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பலதாரமணம் தோன்றியிருக்கிறது. முன் சென்ற மார்க்கங்களிலும் சமுதாயங்களிலும் இது இருக்கவே செய்தது.யூதர்கள், கிறிஸ்தவர்கள், சீனர்கள், இந்தியர்கள் என பல சமுதாயங் களிலும் பலதாரமணம் இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் இதற்கு ஒரு வரம்பு இல்லாமல் இருந்தது. ஒரு மனிதன் தனது விருப்பப்படி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து வந்தான். அதனால் அந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டு வந்தனர். அனால் இஸ்லாம் பெண்களுக்கு இழைக் கப்பட்டு வந்த இந்த அநீதத்தைத் துடைந்தெறிந்தது. நான்கு பெண்களுக்கு மேல் யாரும் மணமுடிக்கக் கூடாது என்று வரம்பு விதித்தது.


இஸ்லாம் பலதாரமணத்தை அனுமதித்த அதே நேரத்தில் அதற்கு நிபந்தனையையும் விதித்தது. மனைவியருக்கு மத்தியில் நீதமுடன் நடந்து கொள்வது தான் அது. இந்த நிபந்தனைக்குப் பங்கம் விளைவிப்பதை கடுமையாக எச்சரிப் பதோடு அதற்கு கடுமையான தண்டனையும் கொடுத் திருக்கிறது.


ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வதற்கு பல அவசியங்கள்-தேவைகள் உள்ளன. உதாரணமாக முதல் மனைவி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவளாக ஆகிவிடலாம். அல்லது அவள் நோயாளியாக அல்லது வேறு ஏதேனும் குறையுள்ளவளாக ஆகிவிடலாம்.


இந்த நிலையில் இத்தகைய பெண்ணை கணவன் விவாகரத்து செய்வது சிறந்ததா? அல்லது அவளுடன் இன்னொருத்தியை மணப்பது சிறந்ததா?


அதுபோல பலதாரமணத்தில் சமுதாயத்துக்கு நன்மையும் உள்ளது. உதாரணமாக போர்கள், போராட்டங்கள் போன்றவற்றின் விளைவாக ஆண் வர்கம் பெருமளவு அழிந்து பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விடுகின்றன. உதாரணமாக உலகப் போர் 25 மில்லியன் விதவைகளை ஐரோப்பாவில் விட்டுச் சென்றது. இந்நிலையில் இத்தகைய பெண்கள் கணவனில்லாமல் விதவைகளாகவே இருப்பது தான் நியாயமா? அல்லது அவர்கள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுவது நியாயமா? 1945-ல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனில் பெண்கள் ஒரு போராட்டம் நடத்தினர். அதில், வேசித் தொழில் செய்வதை விட்டும் ஜெர்மானியப் பெண்களைப் பாதுகாப்பதற்காக பலதார மணத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.


இஸ்லாமிய மார்க்கத்தில் இணைதல்


இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்துவத்தையும் அல்லாஹ் விடம் வெற்றி பெறுவதற்கு ஒரே வழி இஸ்லாம் தான் என்பதையும், இஸ்லாத்தில் இணைவது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும், சொர்க்கம் செல்வதற்கும் நரகிலிருந்து தப்பிப்பதற்கும் இஸ்லாத்தைத் தழுவு வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொண்ட பிறகு இஸ்லாத்தைத் தழுவுவது எப்படி என்பதை விசாரிக்க வேண்டும்.


அதற்குப் பதில் இதுதான்: நீங்கள் இஸ்லாத்தில் சேர


விரும்பினால், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதையும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதையும் நம்ப வேண்டும். இதனை உங்கள் நாவால் மொழியவும் வேண்டும். அதன் பிறகு தொழுகை போன்ற இஸ்லாமியக் கடமைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்க வேண்டும். மேலும் அதனை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாகத் தெளிவாக விளக்கக்கூடிய நூல்கள் ஏராளம் உள்ளன.

Comments