மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்
அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக் க விரும்பும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் அ டிப்படை நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்க ளோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங் குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியி னால் மகிழ்ச்சியடையுங்கள்! இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில் ) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அ தில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையா ளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்! (41:30-32)
திண்ணமாக எவர்கள், அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில் உ றுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள். (46:13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வ சனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப் பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடி கின்றது. அவை வருமாறு:
1-அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவ தோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.
2-உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் புகழ் கிடைக்கின்றது. எவர்கள், அல்லாஹ் எங்கள் இறை வன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலை த்து நிற்கின்றார்களோ... அதாவது எவர்கள் அல் லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோ.... என்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.
3-மரண நேரத்தில் இத்தகையவர்கள்மீது வானவர் கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது, மறுமைக்காக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து, சுகம் மற்றும் பிள்ளைகள் கு டும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்கள் நற்செய்தி கூறுவார்களாம்.
4-அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவ ர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். "உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்" என்று அவ்வானவர்கள் கூறுவார்கள்.40:30 - இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத் துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். "இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்". (அல் குர்ஆன்)
6-உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அரு ளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களு க்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். "உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்". (அல் குர்ஆன்)
7-இந்த உறுதிப்பாடு, அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும் .
உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகள் என்ற இந்த தலைப்பின் முக்கியத்துவம் பல விஷயங்களில் அடங்கியுள்ளது. அவற்றுள் சில:
தற்போது இஸ்லாமிய சமுதாயம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. மார்க்கத்தில் பலவகையான சந்தேகங் களும் அவரவர் தம்மனோஇச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்ட தோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர். அதாவது மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல்ஆகி விடுவார். (நபிமொழி)
கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறு தியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவை ப்படுகின்றன என்பதில் அறிவுடையோர் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இவ்வுறுதியைப் பெறுவத ற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. கார ணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான ச கோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உதவக்கூடியவர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடி யவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள்.
அல்லாஹ் தன்னுடைய வேதத்திலும் தன்னுடை ய நபியின் நாவின் மூலமாகவும் அவர்களுடைய வர லாற்றின் மூலமாகவும் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான அநேக வழிமுறையை நமக்கு தெளிவுபடுத் தியிருக்கின்றான். இது அல்லாஹ் நமக்களித்த அருட்கொடையாகும்.
Comments
Post a Comment
welcome to your comment!