தூக்கத்தின் இடையில் விழித்து விட்டால் துஆ செய்தல்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் இரவில் விழித்து 'லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வசுப்ஹானல்லாஹி வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று கூறி 'இறவைா என்னை மன்னித்து விடு' என்றோ அல்லது வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளுச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும். அறிவிப்பவர்:
உப்பாதா பின் ஸாமித் (ரலி), நூல்: புகாரி -1154 لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُوَ الْحْمُلْكُ وَلَهُوَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوَّالَ وَلَا حَوَّالَ وَلَا حَوْلَّهِ بِاللَّهِ
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியும், புகழும் அவனுக்குரியன. அவன் அனைத்தின் மீதம் ஆற்றலுள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹ் தூயவன்! அல்லாஹ் மிகப் பெரியவன்!
நாம் நன்மை செய்வதும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே.)
22. லாயிலாஹ இல்லல்லாஹ் கூறுதல்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று ஒரு நாளைக்கு நூறு தடவை யார் கூறுகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்கு நிகரான கூலி கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்பட்டு 100 பாவங்கள் மன்னிக்கப்படும். மாலை வரை அது அவருக்கு ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாக அமையும். (மறுமையில்) அவருக்குக் கிடைக்கும் நன்மையை விடச் சிறந்தது யாருக்கும் கிடைக்காது. ஆயினும் ஒருவர் அவர் செய்ததை விடக் கூடுதலாகச் செய்தாலே தவிர." அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-6403, முஸ்லிம்-2691
23. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று 10 தடவை கூறியவர் இஸ்மாயில் (அலை ) அவர்களின் வழித்தோன்றல்களில் பத்து அடிமைகளை விடுதலை செய்தவரைப் போலாவார்." அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: முஸ்லிம்-2693)
Comments
Post a Comment
welcome to your comment!