Thursday 8 September 2016

நாம் அறிந்ததும், அறியாததும் . நாம் செய்வதும் , செய்யாததும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நம் வாழ்க்கையில் எத்தனையோ பல நல்ல காரியங்களை அலட்சியமாகவும் அல்லது அசட்டையாகவும் செய்யாமல் இருந்திருக்கலாம்.. ஆனால், அதன் பலனும் , அதில் உள்ள நன்மை நமக்கு தெரியாது! நாம் உழைத்தால் நமக்கு உடனே கூலி கிடைக்கிறது அதை நம் கண்களால் பார்க்கிறோம். ஆனால் நாம் நல்ல அமல்கள் செய்கிறோம் அதற்கான கூலியை அல்லாஹ் மறுமையில் தான் முழுமையாக கொடுப்பான் . இங்கு நமக்கு ஒரு நற்கூலியின் வெகுமதி தெரியாத காரணத்தினால் . நாம் சில சின்ன நல்ல அமல்களை கூட செய்யாமல் விட்டுவிடுகிறோம்!

ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் பிலால் [ரலி] அவர்களுக்கு கூறினார்கள்.. பிலாலே ! இஸ்லாமில் நீர் செய்த அமல்களில் மேலான அமலை நமக்கு அறிவிப்பீராக! சுவர்க்கத்தில் எமக்கு முன்னால்  உமது செருப்பின் சப்தத்தைக் கேட்டேன். அதற்கு பிலால் [ரலி] அவர்கள், நான் இரவிலோ, பகலிலோ எப்பொழுது ஒலூச் செய்தாலும், ஒளுவுக்கு பின் இரண்டு ரக்அத்துகள்  நபில் தொழுவேன். இதைவிடப் பெரிய எந்த அமலையும்  [விசேஷமாக] நான் செய்யவில்லை என பகர்ந்தார்கள் .
நூல்கள்.. புகாரி, முஸ்லிம் ]


சிந்திக்கவேண்டிய ஒரு நபிமொழி அல்லவா???
எந்த ஒரு நல்ல காரியத்தையும் நாம் லேசாக எண்ண கூடாது! எண்ணம் தான் முக்கியம் ! அல்லாஹ் நம் தோற்றத்தையோ அல்லது செல்வதையோ பார்ப்பதில்லை மாறாக செயல்களும், உள்ளத்தையும் தான் பார்க்கிறான்.

நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக  ஹஜ்ரத் அபூகதாதா [ரலி] அறிவிக்கிறார்கள்.. உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் நுழைந்தால் இரண்டு ரக்அத்துகள்  தொழுவதற்கு முன்பு அவர் அங்கு அமரவேண்டாம்..
நூல்.. புகாரி, முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. உங்களில் ஒருவரின் பிடரியில் அவர் தூங்கும் போது  ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப்  போடுவான். ஒவ்வொரு முடிச்சிலும் , இரவு நீளமாக இருக்கிறது,, நீ நன்றாகத் தூங்குவாயாக'' என்று கூறுவான். அவர்  தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து விட்டால் [திக்ருகளில் ஏதாவதொன்றை கூறி அல்லாஹ்வை புகழ்ந்தால்] அந்த ஷைத்தானின் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடும். அவர் ஒலூச் செய்து விட்டால் இரண்டாவது முடிச்சும் அவிழ்ந்து விடும். அவர் பஜ்ரைத்  தொழுது விட்டால் மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடும். அம்மனிதர் சுறுசுறுப்பானவராகவும் மனமகிழ்ச்சி உடையவராகவும் ஆகிவிடுகிறார். அவர் பஜ்ருத் தொழுகையைத் தொழவில்லை என்றால் மனம் கெட்டவராகவும், சோம்பேறியாகவும் ஆகிவிடுகிறார்.
நூல்.. முஸ்லிம் ]

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது [ரலி] அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் பஜ்ரு நேரம் முடியும் வரை தூங்கிவிட்ட ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு நபி [ஸல்] அவர்கள், அம்மனிதரின்  இரு காதுகளிலும் ஷைத்தான் சிறுநீர் கழித்து விட்டான் என்றோ அல்லது ஒரு காதில் சிறுநீர் கழித்து விட்டான் என்றோ கூறினார்கள்.
நூல்கள்.. புகாரி, முஸ்லிம் ]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.  

No comments:

Post a Comment

welcome to your comment!