Friday 19 August 2016

சிந்திக்க சில வரிகள்...........**********************

சிந்திக்க சில வரிகள்...........**********************
உங்களையும் , உங்கள் குடும்பத்தினர்களையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள் ! என்ற திருமறை வசனம் உள்ளது.

ஒரு பேரீத்தம் பழத்தை கொண்டாவது தர்மம் செய்து உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள் என்ற ஒரு ஹதீஸின் கருத்து!

உங்கள் சிந்தனைக்கு .....
ஒரு பெரியாரின் உள்ளம் ஒரு தீய செயலை எண்ணியது . அப்போது அவரின் முன் விளக்கு எரிந்து கொண்டிருந்தது . அப்பெரியார் தனது உள்ளத்தை நோக்கி....ஓ .......மனமே! நீ.. இத்தீய  செயலை நாடுகிறாய் இதோ எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் உன் விரலை வை. இந்த விளக்கின் சூட்டை நீ பொறுத்துக்கொள்ள முடியுமென்றால் நரகின் நெருப்பையும் நீ பொறுத்துக்க கொள்ளலாம் . அந்த நம்பிக்கையோடு நீ இத் தவறை செய் என்று கூறிவிட்டு எரிந்துகொண்டிருந்த  விளக்கின் ஜுவாலையில்  தன் கைவிரல்களைக் காண்ப்பித்தார் . சற்று நேரத்தில் அவ்விரல் சூட்டால் கொப்பளித்து தோல் உரிய ஆரம்பித்தது . அதற்கு மேல் சூடு தாளாமல் அப்பெரியார் தன் விரலை வெடுக்கென்று  எடுத்துக் கொண்டார்.


மீண்டும் தன் மனதை நோக்கி ஓ.... மனமே! இந்தச் சிறிய நெருப்பையே  உன்னால் தாங்க முடியவில்லையே... நீ மறுமையில் நன்றாக  நெருப்பை எப்படி தாங்கிக்கொள்ள போகிறாய் ..?  உலகிலுள்ள நெருப்பை அது எழுபது பங்கல்லவா  மிகைத்திருக்கும் . அப்படியிருக்க  இந்தச் துணிச்சலில்  இந்தச் தவற்றைச்  செய்ய நினைக்கிறாய்  என்று உள்ளத்திற்கு உபன்னி  யாசம் செய்தார்.  உடனே அவரின் உள்ளம் அத்தவறை  நினைப்பதையே  விட்டுவிட்டது  . அன்பர்களே ! அன்பு சகோதரர்களே ! சகோதரிகளே! தாய்மார்களே ! நம் மனம் ஒரு தவறை செய்ய விரும்பினால் அதனுடன் போராடி வெற்றி கொள்ள வேண்டும். அகத்தின்  உணர்ச்சியை அடக்கி ஒடுக்கிட  அறிவுடையவனால்  நிச்சயம் முடியும். நீங்கள்  அறிவுடையோர் பட்டியலில் தானே இருக்கிறீர்கள் ....!!!

ஒரு சிறிய கவிதையுடன் முடித்துக்கொள்கிறேன்...

மனம் போல வாழ்ந்தாயே ..
மரணத்தில் வீழ்ந்தாயே ...
வாழ்க்கைப் பயணம் முடிந்ததடா ....
கண்ணீரில் உன்னைக் கழுவி  கதறும் உறவெல்லாம் மண்மூடும் காலம் வரை மகிழத்தடா....
நெஞ்சிலே நஞ்சு  வைத்து நாவிலே அன்பு வைத்து வஞ்சக  வாழ்வு நீ வாழ்ந்தாயடா ......
மேனிக்குத் தீனி போட்டு  மெத்தையில் சுகம் கண்டாய்  ..
கட்டையாய்க் கடைசியில் கதை முடிந்ததடா ...
குல்லாவைப் போட்டுவிட்டு அல்லாஹ்வை மறந்து கெட்டால்! கல்லாவில் காலமெல்லாம்  காத்திருந்தாய்..
பல்லக்கில் வளம் வந்தாய்  செல்லாத காசாகி  இன்று நீ சந்தூக்கில் சாந்தி கொண்டாய் ...
மாடிமேல் மாடி வைத்தாய்  கோடி  கோடியாய்ப் பணம் சேர்த்தாய் .. கூடுவிட்டே   இன்று நீ ஓடிவிட்டாய் ...
பெற்றோரும் தவித்திடவே  பிள்ளையும் துடித்திடவே  பள்ளத்தில் பலர் உன்னைப்  படுக்கவைத்தார்.......
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

No comments:

Post a Comment

welcome to your comment!