என்னை அறியாமலே என் கண்கள் கலங்கிவிட்டன !

என்னை அறியாமலே என் கண்கள் கலங்கிவிட்டன !
அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ்! யா அல்லாஹ்! நாங்கள் உனக்கு எத்தனை முறை நன்றி செலுத்தினாலும் நிச்சயமாக உன்னுடைய அருட்கொடைகளை முழுமையாக யாராலும் நன்றி செலுத்தமுடியாது! உணவுகளை குறை சொல்பவர்களை . கொஞ்சம் இந்த காணொளியை பாருங்கள் இத்துப் போன்று நிறைய காட்சிகள் இந்த உலகத்தில் இருக்கிறது! நம்மில் எத்தனை பேர்கள் உணவு உண்ட பிறகு அல்லாஹ்க்கு நன்றி சொல்கிறோம்! உண்ணும்போதும் கூட சிலர் பிஸ்மில்லாஹ் என்று  கூறுவது கூட இல்லை. உணவுகளை தயவு செய்து வீண் விரயம் செய்யாதீர்கள்! திருமணம் அல்லது ஏதாவது நிகழ்ச்சியில் உணவுகளை வீண் விரயம் செய்யாதீர்கள்! பசி என்றால் என்ன என்பது தெரியுமா? பசியினால் எவ்வளவு பேர்கள் இறந்து இருக்கிறார்கள் . மனைவி ருசியாக சமைக்கவில்லை என்பதற்காக எத்தனை கணவன்மார்கள் சாப்பிடாமல் முரண்டு பிடிக்க்கிறார்கள். உணவை வெறுக்கிறார்கள். சிந்திக்க வேண்டும்! ஒரு மனிதனுக்கு உண்ண  உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்! தேவை! ஒரு மனிதன் எங்கே வேண்டுமானாலும் தங்கி விடுவான், ஆனால், அவனால் பசியை தாங்க முடியாது! அவனால் கிழிந்த ஆடையுடன் இருந்துவிட முடியும்! ஆனால், அவனால் உண்ணாமல் , குடிக்காமல் இருக்க முடியாது! 

Comments