சில ரமலான் அறிவுரைகள் .......

சில ரமலான் அறிவுரைகள் .......
அல்லாஹ்வின் திருபெயரால் .....
ஈமான் கொண்டோர்களே!  உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் [அது] விதிக்கப்பட்டுள்ளது,, [அதன் மூலம்] நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்...
அல்குர் ஆன் .. 2,183]

இறையச்சமுள்ளவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் இந்த ரமளானின் அசல் நோக்கம் .அல்லாஹ்வின் விருப்பமும்!

இந்த ரமலானை உங்களுடைய இறுதியாக எண்ணி நடந்துக்கொள்ளவேண்டும். முடிந்தளவு உங்களுடைய வெகுமதிகளை அதிகரிக்க நீங்கள் பாடுபடவேண்டும். இந்த புகைப்படமும் அதைதான் சுட்டிக்காட்டுகிறது..


வித விதமாக உணவுகள் சமைப்பதில் காலத்தை எடுத்துக்கொள்ளாதீர்கள்! உண்ணவேண்டும்! பருகவேண்டும்! வீண்விரயம் செய்யக்கூடாது என்பது குரான் போதனை! அதிகமாக சாப்பிட்டால் நிச்சயமாக நல்ல அமல்கள் செய்வது கடினம். தூக்கம் வரும்! ஒருவிதமான களைப்பு ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்!

இந்த துஆவை மனனம் செய்துக் கொள்ளுங்கள்! குர்ஆனில் உள்ள சிறந்த துஆ!
பொருள்..இறைவனே!  நீ என் மீதும் , என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக  [அருட்கொடைகளுக்காக] நன்றி செலுத்தவும் , உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய சாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! [இதில் எனக்கு உதவுவதற்காக]  என்னுடைய சந்ததியையும் சாலிஹான வர்களாக  [நல்லது செய்பவர்களாக] சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்,, அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக [உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக]  இருக்கிறேன்'' என்று கூறுவான்..

  அல்லாஹ்  நம் அனைத்து நல்ல அமல்களையும் , நோன்பையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்கான அழகான துஆ!


 
அல்லாஹ்  விரும்பியப்படி நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும். நம்முடைய அமல்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு அழகான எளிதான மனனம் செய்யும் அளவுக்கு துஆ!

 யா அல்லாஹ் ! எங்களுடைய சாலிஹான [நல்ல] அமல்களை ஏற்றுக்கொள்வாயாக! என்று எப்பொழுதும் கேட்க வேண்டும்.

இஸ்லாத்திலேயே வாழச் செய்து  முஸ்லிமாக இருப்பதுடன் அல்லாஹ்  நம் அனைவரையும்  களிமாவுடன் மரணிக்கச் செய்வானாக..
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ்  இனி ரமளானுக்கு பிறகு தொடரும் ...........

Comments