Monday 23 May 2016

காரியங்களில் சிரமம் ஏற்படும்போது ...

 

காரியங்களில் சிரமம் ஏற்படும்போது ...
اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا ، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا


அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஐஅல்த்தஹு ஸஹ்லன் வ அன்த்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்


பொருள் : யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய்.


ஆதாரம் : இப்னுஹிப்பான்




 

ஷிர்க்கை அஞ்சிக் கொள்வது.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ


அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன் உஸ்ரிக பிக வஅன அஃலமு வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு


பொருள் : யா அல்லாஹ்! நான் அறிந்துகொண்டே உன்னோடு வேறொன்றை இணையாக்குவதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் நான் அறியாத இணை வைப்பிலிருந்தும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.


ஆதாரம் : அஹ்மத்


 

குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேடுதல்..
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ ، وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ


[உஈதுக்குமா] பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி ஐனின் லாம்மத்தின்


பொருள் : ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நஞ்சுள்ள ஒவ்வொரு ஜந்துகளை விட்டும், கெட்ட எண்ணமுடன் தீண்டகுடிய ஒவ்வொரு பார்வையை விட்டும் உங்கள் [இருவருக்காக] அல்லாஹ்வுடைய பூரண வார்த்தைகளை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். (குழந்தை ஒன்று என்றால் ‘உஈதுக்க’ என்று சொன்னால் போதும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வாஸல்லம் இரு குழந்தைகளுக்கும் சேர்ந்து ஓதியதால், ‘உஈதுக்குமா’ என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பெண்ணாக இருந்தால் ‘உஈதுக்கி’ என்று கூற வேண்டும்.


ஆதாரம் : புகாரி
மேலே உள்ள துஆவை ஓதி உங்கள் பிள்ளைகளுக்கு உடலிலும் தடவி விடுங்கள். இவைகள் அனைத்தும் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் பொன்மொழிகள் . வழிமுறைகள்.


No comments:

Post a Comment

welcome to your comment!