வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் !

வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் !
மனிதன் ஒரு அழகான படைப்பு!குழந்தை பருவம்.
பிறகு வாலிப பருவம் . பிறகு நடுநிலையான வயது.
அடுத்து வயதான நிலை! மனிதனுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டது!
அறிவு, திறமை, திறன், வலிமை, ஆற்றல்,
குழந்தை பிறக்கும்போதே கைகளை மூடிக் கொண்டு பிறக்கிறது.
ஏதோ , இருப்பதுபோல இரு கரங்களை மூடிக் கொண்டு  வெறுங்கையுடன்
துன்யாவுக்குப் போகிறேன், இதேபோல துன்யாவை விட்டு செல்லும் போதும்  வெறுமனமே தான் செல்வேன் ' என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டு  குழந்தை
பிறக்கிறது!

அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் எல்லா விஷயத்திலும் வாழ்ந்துக் காட்டிவிட்டும். சொல்லிவிட்டும் சென்றுவிட்டார்கள் . அவைகளை நாம் அன்றாடம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்! அன்றாடம் ஓதவேண்டிய துஆக்க்களை  மனனம் செய்து ஓதிவரவேண்டும் .

மனிதன் வாழும்போது  அவனுக்கு தேவையான பாதுகாப்பு வேண்டும்.அந்த பாதுகாப்பு அல்லாஹ்விடம் கோரவேண்டும்.. அதற்காக அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின்  நேசம் நமக்கு வேண்டும். அவனை நெருங்குவதற்கான வழிகளை நாம் தேட வேண்டும். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நமக்கு காட்டித் தந்துள்ளார்கள்.

நாம் ஒவ்வொருநாளும்  வெளியில் செல்கின்றோம். நமக்கு யார் பாதுகாப்பு .? ''அல்லாஹ்தான்!''  நமக்கு ஏதாவது ஆபத்துக்கள் வரலாம் . வீட்டை விட்டு வெளியே செல்லும்போது  நாம் ஓதவேண்டிய துஆக்கள் . வாகனத்தில் போகும்போது துஆ! வெளியிலும் கால்நடையாக செல்லும்போதும் துஆ!

இம்மைக்கும் மறுமைக்கும் ஒரே வெற்றி  இஸ்லாம் காட்டித் தந்த வழியில் சென்றோம் என்றால் நமக்கு நிச்சயமாக  அல்லாஹ்  வெற்றியைக் கொடுப்பான். 

Comments