Thursday 26 May 2016

தூங்கச் செல்லும்போது ஓதும் துஆ [அவசியம் ]

தூங்கச் செல்லும்போது ஓதும் துஆ [அவசியம் ]
« اَللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكِ ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ ، لاَمَلْخَأَ وَلاَمَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ »

பொருள்: இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். எனது முகத்தை உன் பக்கம் திருப்பி விட்டேன். எனது காரியங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும் என் முதுகை உன்பக்கம் சாய்த்து விட்டேன். உன்னையன்றி எனக்கு ஒதுங்குமிடமோ தப்பிக்குமிடமோ வேறில்லை. இன்னும் நீ இறக்கி அருளிய வேதத்தின் மீதும் நீ அனுப்பிய உன் நபியின் மீதும் நான் விசுவாசம் கொண்டேன்.



இந்த துஆவின் சிறப்பு:

பர்ரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நீ தூங்குவதற்காக உனது படுக்கைக்குச் சென்றால், தொழுகைக்கு உளூச் செய்வது போல உளூச் செய்து கொள். பின்பு ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு,

அல்லாஹும்ம அஸ்லம்து நஃப்ஸீ இலைக, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக,  வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக, ரஃக்பதன் வரஹ்பதன் இலைக, லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க இல்லா இலைக, ஆமன்த்து பி கிதாபிகல்லதீ அன்ஜல்த்த வ நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த.

என்று ஓது. அன்றிரவு நீ இறந்து விட்டால் இஸ்லாத்தின் இயல்பு நிலையின் மீதே இறந்தவனாவாய். அன்று காலையில் நீ எழுந்தால் நலமாக எழுவாய். இவற்றை உனது பேச்சுக்களில் இறுதியாக ஆக்கிக் கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

No comments:

Post a Comment

welcome to your comment!