பிட்கொய்ன் (Cryptocurrancy)
பற்றிய மார்க்க நிலைப்பாடு என்ன?
01. கிரிப்டோகரன்ஸி (Cryptocurrancy)
கிரிப்டோகரன்ஸி என்பது பொருளாகவோ பணமாகவோ கையில் எடுக்கமுடியாத ஒன்று. கம்பியூட்டர், எலக்ட்ரோனிக் கருவிகளுக்கு மத்தியில் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ள மான ஒன்று. அது ஒரு பணத்தின் முடியுமான பெறுமதியைத் தரும்.
02.பிட்கொய்ன் (Bitcoin)
பலவகையான கிரிப்டோகரன்ஸிகள் உண்டு. ஆரம்பத்தில் சதோசி நகமோடா(Satoshi Nakamoto) என்பவரால் ஜப்பானில் உருவாக்கப்பட்டதுதான் பிட்கொய்ன் என்று சொல்வார்கள். அது ஒரு நபரா அல்லது கூட்டமா அல்லது அமைப்பா அதன் பின்னணி என்ன என்று இன்றுவரை யாருக்கும் தெளிவில்லாத ஒன்று. அவருடைய ஒரு ஆய்வுக்கட்டுரை மட்டுமே இணையத்தில் பெற்றுகொள்ளமுடியும். கிரிப்டோகரன்ஸி பிரபல்யமடையக் காரணம் என்ன என்பதை தொடர்ந்து வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம்.
இப்போது வழக்கத்திலிருக்கும் அமைப்பில் பிட்கொய்னை அவர் உருவாக்கினார். பிட்கொய்ன் (Bitcoin) i Litecoin, Ethereum, Dogecoin
என்று பல உள்ளன. இன்று டொச்கொய்ன் (Dogecoin) பிரபல்யமடைந்துவருகிறது. இவ்வாறு கையில் பணமாக எடுக்கமுடியாத கம்பியூட்டர், எலக்ட்ரோனிக் மூலம் பரிமாற்றம் செய்யக்கூடிய முறைமையை பலரும் உருவாக்கி இன்று உயர்ந்த இடத்தில் பிட்கொய்ன் பேசப்படுகின்றது.
ஒரு பிட்கொய்னின் பெறுமதி இலங்கையின் பெறுமதியில் ஒரு கோடிக்கு சமமானது. (02.20.2021) இன்றைய (20.06.2021) (1Bitcoin=7,180,063.66 LKR) பெறுமதி
03.ஒருவரிடம் இருக்கும் பிட்கொய்ன்களைக் கொண்டு என்ன வாங்கலாம்? எங்கே வாங்கலாம்? யாரிடம் வாங்கலாம்?
பிட்கொய்னை அங்கீகரிப்பவர்களிடமிருந்து வாங்கலாம். சில இணையத்தளங்களில் ஒரு பொருளை வாங்கும் போது Visa/MasterCard/American express போன்ற பட்டியலில் அங்கீகரித்திருக்கிறார்கள். பிட்கொய்னையும் இதுபோன்ற இணையத்தளங்களில் இருந்து தேவையான பொருளுக்குரிய பெறுமதியை பிட்கொய்ன் ஊடாக செலுத்தி வாங்கிக்கொள்ள முடியும்.
04.பிட்கொய்னை எவ்வாறு பணமாக மாற்றுவது?
பிட்கொய்னின் தேவை இருப்பவரிடம் பிட்கொய்னை இணையவழி ஊடாக பரிமாற்றம் செய்து பணமாக மாற்றிக்கொள்ள முடியும். பிட்கொய்ன் சம்பந்தமான Request மூலமாகவும் பிட்கொய்னுக்காக உருவாக்கப்பட்ட Apps ஊடாகவும் அதற்குரியவர்களை இணங்கண்டு. பிட்கொய்னுக்கு எவ்வளவு பணம் பெறுமதி என்பதை அவர்களுக்கிடையில் பேசித் தீர்மானித்த பின் வழக்கத்தில் உள்ள வங்கி கணக்கிலக்கத்தைக் கொடுத்து பணத்தை பரிமாறிக்கொள்வார்கள்.
மக்களிடம் பிட்கொய்னின் தேவையை ஏற்படுத்தி பெறுமதி இல்லாத ஒன்றை பெறுமதியாக்கிவிட்டார்கள்.
05.பிட்கொய்னின் முறைமை என்ன?
பணம் மற்றும் உபகரணங்களை முதலீடு செய்து பல சிரமங்களுக்கு மத்தியில் நிலத்திலிருந்து எடுத்து பதனிட்டு நகையாக மாற்றி தங்கம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. ஒரு பெரிய முதலீடு செய்துதான் தங்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ரூபாய், டொலர், ரியால், திர்ஹம் என்று ஏற்றத்தாழ்வு இல்லாமல் நாட்டுக்கு நாடு பணம்
வேறுபடாமல் சர்வதேச ரீதியில் ஒரே அளவை வைத்து வியாபார நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என சிந்தித்து தொழிநுட்பத் துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் உருவாக்கியதுதான் பிட்கொய்ன் முறைமை.
பிட்கொய்ன் 2140 ஆவது வருடம் வரை இயங்கும் வகையில் அதனுடைய கோடிங் முறைமைகளை உருவாக்கி வைத்திருக்கிறார். காலங்கள் கடந்து செல்லும் போது கஷ்டமாகின்ற விதத்தில் இம்முறைமையை உருவாக்கியும் வைத்திருக்கிறார். முதலாவது இலகுவாக இருக்கும் இரண்டாவது அதைவிட சிரமமாகும். மூன்றாவது, நான்காவதுக்கு அதிக காலம் தேவைப்படும்.
ஒரு பிட்கொய்ன் வருவதற்கான டீகோடிங்(Mining) செய்ய ஓரிரு மாதங்கள் தேவைப்படும். ஆரம்ப காலப்பகுதியில் சாதாரண கணனியில் இருந்து டீகோட்(Mining) செய்து எடுத்தார்கள். பின்னர் விரைவாக இயங்கும் கேமிங் லப்டொப் (Gaming Laptop) போன்றவற்றிற்கு மாற்றினார்கள். சாதாரண கணனி பின் கேமிங் லப்டொப் என வளர்ந்து பெரியளவில் ஒரு சேவர் (Server) வைத்து செய்யும் அளவிற்கு மாற்றம் பெற்றது. பின்னர் பிரத்தியேக இலத்திரனியல் பிட்கொய்னுடன் கருவிகளையும் சேர்த்து கண்டுபிடித்து எத்தீரியம் போன்றவற்றையும் இணைத்துள்ளார்கள். இவ்வாறு ஒரு பிட்கொய்னை பெறுவதற்கு மின்சாரம். கருவிகள், வேலையாட்கள் போன்ற பல கோடி செலவு செய்யவேண்டி உள்ளது. பிட்கொய்ன் சந்தையில் டிமான்ட் அதிகமாக இந்த சிரமமே காரணமாக இருக்கின்றது.
இப்பொழுது பெரிய முதலீடு செய்து பிட்கொய்னை பணவசதியுள்ளவராகத்தான் இப்படி வசதிபடைத்தவர்கள் எடுப்பவர்கள் இருக்கவேண்டும். டீகோட் (Mining) செய்து தாங்கள் பெற்றுக்கொண்ட பிட்கொய்னை விற்கும் ஏகபோக உரிமையாளர்களாக இவர்களே மாறுவார்கள். ஒருகாலத்தில் இலகுவாக சேமித்தவர்கள் இதில் தற்போதைய நிலை இதுதான். அடங்கினாலும்
பிட்கொய்ன் 21 மில்லியன் எண்ணிக்கையை அடையும் வரையில் கோடிங் செய்யப்பட்டுள்ளது. 2140 ஆம் ஆண்டளவில் பிட்கொய்ன் மக்கள் மயப்படுத்தப்பட்ட பின்னால் பணவீக்கம் முற்றாக நீங்கும் என்பது பிட்கொய்னை உருவாக்கியவரின் எதிர்பார்ப்பு.
பிட்கொய்னை பிரபல்பயபடுத்தும் முகமாக அடிக்கடி சில வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் அவர்கள் கேட்கும் தொகை பிட்கொய்ன்களை கொடுத்து ஹெக் பண்ணப்பட்டவற்றை மீட்டெடுப்பார்கள். இதுபோன்ற சந்தர்ப்பத்தால் முக்கியமான விபரங்களை வைத்திருந்தவர்கள் பிட்கொய்ன்களை வாங்கும் நிலை ஏற்படுகின்றன.
உலகத்தின் முதல் பணக்காரராக 2021 இல் அறிவிக்கப்பட்ட டெஸ்லா(Tesla) கம்பனியின் ஓனர் எலன் மாஸ்க் (Elon Musk) கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டொலரைக் கொடுத்து ஒரு தொகை பிட்கொய்ன்களை வாங்கியிருக்கிறார். அவர் வாங்கிய பின் அதன் பெறுமானம் அதிகரித்தது. அதன் பின் அதனை விற்றாரா? விற்கவில்லையா? விற்பாரா? என்பது தெரியாது. (இப்பொழுது டெஸ்லாவின் நிலை அறிந்ததே)
இது ஷேர் மார்கடிங்(Share Marketing) இல் சிக்னலைப் போல் ஒன்று. சிக்னல் என்பது ஷேர் மார்க்கட்டில் ஏதாவது ஒன்றிற்கு டிமான்ட் ஏற்படுத்த இயங்கும் ஒரு அணி. இவர்கள் ஒன்றின் பெறுமானத்தை அதிகரித்துவிட்டு பின் அதனை குறைத்துவிடுவார்கள். அதேபோலதான் பிட்கொய்னும் யாரோ ஒருவர் பெறுமானம் கொடுக்க கொடுக்க அதிகரித்து செல்லும் வரலாறு உள்ள ஒன்று.
06.பிட்கொய்ன் பற்றிய எமது நிலைப்பாடு என்ன?
இது ஒரு ஙரர் ஆகும். வியாபாரம் ஹராம் ஆகும் 3 முறைகளில் ஙரர் பிரதானமானது அல்-ஙரர் (நம்பிக்கையற்ற, தெளிவற்ற தன்மை). இந்த அடிப்படையில் நம்பிக்கையில்லாத தெளிவில்லாத பாதுகாப்பற்ற தன்மையில் பிட்கொய்ன் இருப்பதால் இது ஹராம் என்பதுதான் பிட்கொய்ன் பற்றிய எமது நிலைப்பாடு.
குளத்தில் உள்ள மீன்களின் எண்ணிக்கை தெரியாமல் விலைபேசி தீர்மானிக்கும் வியாபாரம் ஹராம். வாங்குபவரும் விற்பவரும் ஏற்படும் இலாப, நஷ்டத்தை ஏற்றுக்கொண்டாலும் சரியே. இது போல் தெளிவில்லாத வியாபார முறைமை தான் பிட்கொய்ன்.
வாங்குபவரும் விற்பவரும் மோசடி செய்யவேண்டும் என்ற நோக்கமில்லை என்றாலும் வியாபாரத்தில் மோசடித்தன்மை இருப்பதுதான் ஙரர் என்பது. இன்றைய சூழலில் ஙரருக்கு மிகப் பொறுத்தமான உதாரணம் பிட்கொய்ன் என்று சொல்லுமளவுக்கு நிறைந்துள்ளது. பிட்கொய்னில் ஙரர்
07.பிட்கொய்னுக்கு அரச உத்தரவாதம் உண்டா?
இஸ்லாம் அங்கீகரிக்கின்ற ஒரே நாணய அலகு தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு, பித்தளை (புலூஸ்) பெறுமதியற்ற இஸ்லாத்தின் முரணானவைகளே. நாணயங்கள். எல்லா தன்னகத்தே நாணயங்களும் அடிப்படைகளுக்கு
இப்போது வழக்கத்தில் உள்ள பண நோட்டுக்களுக்கு சர்வதேசரீதியில் உத்தரவாதம் உண்டு. சரவதேச ரீதியில் உத்தரவாதம் வழங்கப்பட்ட டொலர், ரியால், தீனார், பவுன், ரூபாய் போன்ற நாணய அலகுகளின் ஊடாக உலகத்தில் எங்கு சென்றாலும் தேவைகளை அதனூடாக எமது பூர்த்தி செய்துகொள்ளலாம். ஆனால் பிட்கொய்னுக்கு உத்தரவாதம் இல்லை.
ஒருவரிடம் இருக்கும் பிட்கொய்னை பணமாக மாற்றவேண்டுமென்றால் ஆரம்பமாக இது சம்பந்தமான Apps ஐ Download செய்து பின் அதற்குரியவர்களைத் தேடி அவர்களை நம்பி, பிட்கொய்ன் வைத்திருப்பவர் பிட்கொய்ன் Account க்கு முதலாவது போடுவதா? அல்லது பணம் வைத்திருப்பவர் வங்கி Account க்கு பணத்தை போடுவதா? என்பதை இருவரும் முடிவு செய்து பரிமாற்றம் செய்துகொள்வார்கள். இந்நேரத்தில் ஆரம்பமாக பிட்கொய்ன் அல்லது பணம் கொடுத்தவர் ஏமாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். பிட்கொய்னைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ள ஒரே பிரதான வழி இதுதான்.
இதற்கான காரணம் வழக்கிலுள்ள நோட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட பண அரச உத்தரவாதம் உண்டு. அதுபோல் பிட்கொய்னுக்கு அரச உத்தரவாதம் இல்லை. செய்வதற்கென்று நிறுவனங்களும் இல்லை. எந்த முறைப்பாடு பொறுப்பான
ஙரர், நம்பகத் தன்மை, மோசடி, தெளிவின்மை இருப்பதால் பிட்கொய்ன் ஹராம் ஆகின்றது.
உலகத்தில் சாதாரண மனிதனும் பயன்படுத்துகின்ற நிலை வரும் வரையிலும் அரச உத்தரவாதம் கிடைக்கும் வரையிலும் அது சம்பந்தமான முறையீடுகளை செய்வதற்கான அரச அங்கீகரித்த நிறுவனங்கள் உருவாகும் வரையிலும் பிட்கொய்ன் மார்க்க அடிப்படையில் ஹராமானது.
08.நபிகளாரின் காலத்தில் தங்கம், வெள்ளி அரசாங்க உத்தரவாதம் பெற்றதா?
நபிகளாரின் காலத்தில் தங்கம், வெள்ளி அரசாங்க உத்தரவாதம் வழங்கப்படவில்லை.
மக்கள் தீர்மானிக்கும் வகையில்தான் அதன் பெறுமானம் இருந்தது என பிட்கொய்ன் அனுமதி என்று சொல்கின்றவர்கள் வாதிக்கின்றனர். நபிகளார் காலத்தில் தங்கம், வெள்ளிக்கு அரசாங்க உத்தரவாதம் தேவைப்படவில்லை. காரணம் தங்கம், வெள்ளி தன்னகத்தே பெறுமதியான ஒன்று. தன்னகத்தே பெறுமதியான ஒன்றில் யாரும் ஏமாற்றம் அடைய வாய்ப்பு இல்லை. அதற்கு அரசாங்க உத்தரவாதம் தேவையுமில்லை.
09.பண நோட்டும் வெறும் பேப்பர்தானே!
பண நோட்டும் வெறும் பேப்பர்தானே! அதற்கு எந்த பெறுமானமும் இல்லை என்று பிட்கொய்னை ஆதரிப்பவர்கள் இன்னொரு வாதத்தை முன்வைக்கின்றனர். பண நோட்டும் ஒரு பேப்பர் தான். பணநோட்டும் பெறுமதியற்ற ஒன்றுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சர்வதேச ரீதியில் அதன் பெறுமானம் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான அரச உத்தரவாதமுண்டு. உண்மையில் தங்கம், வெள்ளி போன்று தன்னகத்தே பெறுமானம் கொண்ட பண முறைமைதான் சரியானது என்பது எமது நிலைப்பாடு. இன்றைக்குள்ள நடைமுறை என்பது மார்க்க முரணானது. பணஎன்றாலும் சர்வதேச ரீதியாக அதற்கு அரசாங்க உத்தரவாதம் உண்டு என்பதும் அதில் மேற்குறிப்பிட்ட ஏமாறும் தன்மை இல்லை என்பதினாலும் அதைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனாலும் அதன் உபயோகம் அனுமதிக்கப்படுகின்றது.
பண நோட்டுக்கு முழு பெறுமதிகொடுத்து உலகமே உத்தரவாதம் வழங்கியிருப்பதால் ஒருவர் ஏமாறுவதற்கான வாய்ப்பு கிடையாது.
சில நாடுகள் பிட்கொய்ன் முறைமையை அனுமதித்து இருக்கின்றன. இருந்தாலும் நாடுகள் இதனை தடைசெய்திருக்கின்றன. பல முழுமையான
ஙரர் நீக்கப்பட்டு அரச உத்தரவாதமும் அதற்கு வழங்கப்பட்டால் பணநோட்டுக்கள் போன்று பிட்கொய்னையும் பயன்படுத்தலாம். அதுவரை பிட்கொய்ன் முறைமை சந்தேகத்துக்குரியதும் மோசடித் தன்மை உள்ளதுமாகும்.
பிட்கொய்னை வழங்குபவர்கள் தள்ளிவிட்ட ஆதரித்து மோசடிக்குள் பத்வா மக்களை முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும்.
பக்கம் 15 இல் 16
எதுவாக இருந்தாலும் தங்கம், வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமையே இஸ்லாம் அங்கீகரிக்கின்ற பொருளாதார முறைமை . பணநோட்டு முறைமைகளாக இருந்தாலும் இலத்திரனியல் பிட்கொய்ன் முறைமைகளாக இருந்தாலும் மார்க்க முரணானவைகளே.
அல்லாஹ் அறிந்தவன்.
Comments
Post a Comment
welcome to your comment!